தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு


தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு
x

கோப்புப்படம் 

வருகிற 2-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதேபோல, கிழக்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக கடந்த 3 நாட்களாக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (27-ந்தேதி) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 29-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், கோவை, தென்காசி ஆகிய 22 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை ஒருசில பகுதிகளில் மிதமான மழையும், சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story