தமிழகத்தின் 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு... !
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை,
தெற்கு அந்தமான் கடலில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதுமேலும் வழுப்பெற்று வரும் 30-ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. அதன்பின் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விருதுநகர், ராமநாதபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், ஈரோடு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.