தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு


தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 15 Nov 2023 5:07 PM IST (Updated: 15 Nov 2023 5:13 PM IST)
t-max-icont-min-icon

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது.

சென்னை,

தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து இன்று மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது இது விசாகப்பட்டினத்திற்கு கிழக்கே சுமார் 410 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடா்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story