சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

*தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று(செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை(புதன்கிழமை) முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது.

*தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 9.35, 10.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் வருகிற 23, 24-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது.

*தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று முதல் 24-ந்தேதி வரை முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது.

*கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 9.30, 10 மற்றும் 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று மற்றும் நாளை முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது.

*கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.20, 11.40, 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் வருகிற 23 மற்றும் 24-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story