டுவிட்டர் டிரெண்டிங்கில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


x
தினத்தந்தி 9 Oct 2022 3:21 PM IST (Updated: 9 Oct 2022 3:28 PM IST)
t-max-icont-min-icon

திமுக தலைவராக மீண்டும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், டுவிட்டரில் "தலைவர் எம்.கே.ஸ்டாலின்" என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

சென்னை,

திமுக தலைவராக தொடர்ந்து 2-வது முறையாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், டுவிட்டரில் "தலைவர் எம்.கே.ஸ்டாலின்" என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

15-வது திமுக பொதுக்குழு கூட்டம் இன்று அமைந்தகரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டிஆர் பாலுவும் போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் திமுக தொண்டர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பலரும் "தலைவர் எம் கே ஸ்டாலின்" என்ற ஹேஷ்டேக் மூலம் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து டுவிட்டரில் "தலைவர் எம்.கே.ஸ்டாலின்" என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.


Next Story