சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 20 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி...!
தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 20 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் சிறப்பு கண்காட்சி நடைபெறுகிறது.
சென்னை,
இந்து மத கடவுள் விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளுடன் சிறப்பு கண்காட்சி நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் சுமார் 20 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்தக் கண்காட்சி இன்று முதல் 12 நாட்கள் நடைபெறுகிறது. ஒரே இடத்தில் காணப்படும் ஏராளமான விநாயகர் சிலைகளை காண பொதுமக்கள் ஆர்வமுடன் வந்த வண்ணம் உள்ளனர்.
Related Tags :
Next Story