தொழில்நுட்பக்கோளாறால் பாதிக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரெயில் சேவை சீரானது


தொழில்நுட்பக்கோளாறால் பாதிக்கப்பட்ட  சென்னை மெட்ரோ ரெயில் சேவை சீரானது
x
தினத்தந்தி 14 Jan 2024 12:27 PM IST (Updated: 14 Jan 2024 12:38 PM IST)
t-max-icont-min-icon

மெட்ரோ ரெயில் சேவை தொழில்நுட்பக்கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் சேவை, தொழில்நுட்பக்கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது. சென்னை விமான நிலையம் முதல் அண்ணா சாலை வழியாக விம்கோ நகர் வரை இயக்கப்படும் மெட்ரோ ரெயில் சேவையில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து, சென்னை மெட்ரோ ரெயில் இயக்கப் பணிகளில் தடை ஏற்பட்டதால் அனைத்து மெட்ரோ ரெயில்களும் காலதாமதமாக இயக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தொழில்நுட்பக்கோளாறு சரிசெய்யப்பட்டு வழக்கம்போல மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது.


Next Story