சென்னை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் மரணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்


சென்னை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் மரணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
x

மரணமடைந்த சென்னை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சியின் 59-வது வார்டு உறுப்பினரும், தி.மு.க.வின் துறைமுகம் மேற்கு பகுதி துணைச் செயலாளருமான சரஸ்வதி கருணாநிதி மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். சீரிய மக்கள் பணியால், தனது பகுதியில் உள்ள ஒவ்வொருவரது வீட்டிலும் அங்கமாகி சரஸ்வதி நற்பெயர் பெற்றிருந்தார். அந்த வகையில், ஒரு சிறந்த பெண் அரசியல் ஆளுமையை நாம் இழந்துவிட்டோம். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் தி.மு.க. தோழர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story