சென்னை: பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!


சென்னை: பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!
x

சென்னை, சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

சென்னை,

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை முதலே கனமழை பெய்துவருகிறது. இதனிடையே, மழையால் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அப்போது இடிபாடுகளில் சிலர் சிக்கிக்கொண்டனர்.

இது தொடர்பான தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், இடிபாடுகளில் சிக்கியவரகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த நிலையில், படுகாயமடைந்த 30 வயது இளைஞர் ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 7 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story