செஸ் ஒலிம்பியாட் பாதுகாப்பு பணி; 4 ஆயிரம் போலீசாருக்கு சிறப்பு படி - டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவிப்பு


செஸ் ஒலிம்பியாட் பாதுகாப்பு பணி; 4 ஆயிரம் போலீசாருக்கு சிறப்பு படி - டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவிப்பு
x

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடும் 4 ஆயிரம் போலீசாருக்கு சிறப்பு படி வழங்க டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் உலகம் முழுவதும் 190 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வருகை தர உள்ளார்.

இதனை முன்னிட்டு, வரும் 25-ந்தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை மொத்தம் 100 காவல் ஆய்வாளர்கள், 380 காவல் உதவி ஆய்வாளர்கள், 3,520 காவலர்கள் என மொத்தம் 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மொத்தம் 17 நாட்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு வழங்க சிறப்பு படியாக, ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.


Next Story