முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலினின் அனைத்து நிகழ்ச்சிகளும் 3 நாட்கள் ரத்து


முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலினின் அனைத்து நிகழ்ச்சிகளும் 3 நாட்கள் ரத்து
x

கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினின் அனைத்து நிகழ்ச்சிகளும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேலும் வலுப்பெற்று வரும் 5 ஆம் தேதி நெல்லூருக்கும் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக தேவையான முன்னேற்பாடுகளை தமிழக அரசு முழு வீச்சில் மேற்கொண்டுள்ளது.

இதனிடையே, கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலினின் அனைத்து நிகழ்ச்சிகளும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது, நாளை முதல் வரும் 4 ஆம் தேதி வரை முதல் - அமைச்சரின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story