சோனியா காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து


சோனியா காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
x
தினத்தந்தி 9 Dec 2023 9:43 AM IST (Updated: 9 Dec 2023 9:47 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் பலரும் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில், அர்ப்பணிப்புமிக்க பொதுவாழ்க்கைக்கு அடையாளமாக விளங்கும் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நீண்டகாலம் நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும். சோனியா காந்தியின் ஆழ்ந்த தொலைநோக்கும் அனுபவச் செல்வமும் எதேச்சாதிகார சக்திகளிடம் இருந்து இந்தியாவைப் பாதுகாக்கும். நம் ஒன்றிணைந்த முயற்சிக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் தொடர்ந்து அமைந்திடட்டும், என்று வாழ்த்து கூறியுள்ளார்.

1 More update

Next Story