சென்னை வண்ணாரப்பேட்டையில் மாநகர பேருந்து தடுப்புச்சுவர் மீது மோதி விபத்து


சென்னை வண்ணாரப்பேட்டையில் மாநகர பேருந்து தடுப்புச்சுவர் மீது மோதி விபத்து
x

விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

சென்னை,

சென்னை கோயம்பேட்டில் இருந்து வள்ளலார் நகரை நோக்கி மாநகர பேருந்து ஒன்று சுமார் 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து வண்ணாரப்பேட்டை தங்கசாலை மேம்பாலம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை தீயணைப்புத்துறையினர் தடுப்புச்சுவர் மீது ஏறி நின்ற பேருந்தை கிரேன் மூலம் மீட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Next Story