சென்னை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மோதல் - நிர்வாகிகள் கட்டையால் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு


சென்னை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மோதல் - நிர்வாகிகள் கட்டையால் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு
x

ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கிக் கொண்டதால், காங்கிரஸ் தலைமை அலுவலத்தில் கலவரம் போன்ற சூழல் உருவானது.

சென்னை,

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியை கட்சி நிர்வாகிகள் சிலர் முற்றுகையிட்டனர்.

இந்த முற்றுகையின் போது நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கிக் கொண்டதால், அங்கு கலவரம் போன்ற சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவனுக்கு போலீசார் வரவழைக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

1 More update

Next Story