அம்பத்தூர் அருகே ஏரியில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் சாவு


அம்பத்தூர் அருகே ஏரியில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் சாவு
x

அம்பத்தூர் அருகே ஏரியில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.

சென்னை

சென்னை அம்பத்தூர் அடுத்த கள்ளிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர், தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் அரிகுமார் (வயது 14). இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று பள்ளி விடுமுறை என்பதால் அரிகுமார், வீட்டின் அருகில் உள்ள கள்ளிகுப்பம் ஏரி அருகே நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஏரியில் இறங்கி கால் கழுவ முயன்ற அரிகுமார் நிலைதடுமாறி ஏரிக்குள் விழுந்து விட்டார். இதில் நீரில் மூழ்கிய அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஏரியில் மூழ்கி பலியான அரிகுமார் உடலை மீட்டனர். இது குறித்து அம்பத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story