காஞ்சீபுரத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டம்


காஞ்சீபுரத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டம்
x

காஞ்சீபுரத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம்

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத் துறை சார்பில் 4,300 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 150 நகர கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் ஏற்படும் சங்க மற்றும் பணியாளர்கள் பிரச்சினையை தீர்க்கக் கோரி காஞ்சீபுரம் செங்கல்பட்டு, விழுப்புரம், மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து ஊழியர்கள் ஒருங்கிணைந்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் 4 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து வரும் 12-ந் தேதி ஏழு மண்டலங்களிலும் சிறை நிரப்பும் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

போரட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூட்டுறவு சங்கங்களில் நகை கடன், பயிர் கடன் என ஏற்கனவே பல்வேறு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கூட்டுறவு சங்கத்தின் பெயரிலே விவசாய உபகரங்களுக்கு அதை வாடகைக்கு விவசாயிகளுக்கு அளித்து அதனை மீண்டும் செலுத்த கூறுவது பெரும் சிரமத்தை ஏற்படுத்தும், விவசாயிகளிடம் பணம் பெறுவதில் பெரும் சிரமம் உள்ளது. இதனால் இரு தரப்பிற்கும் வாக்குவாதம் அதிகரிக்கும் நிலையில் பணியாளர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகுவார் என தெரிவிக்கின்றனர்.


Next Story