கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரம் - 5 பேரை காவலியில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை


கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரம் - 5 பேரை காவலியில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
x

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் கைதான நபர்களில் 5 பேரை 7 நாட்கள் காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை,

கோவை மாவட்டம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களில் 5 பேரை நேற்று காவலில் எடுத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், அவர்களை கோவை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் வரும் 16-ந்தேதி வரை 7 நாட்களுக்கு விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story