கோவை: கார் லாரி நேருக்கு நேர் மோதல் - பயிற்சி டாக்டர் பலி


கோவை: கார் லாரி நேருக்கு நேர் மோதல் - பயிற்சி டாக்டர் பலி
x

கோவையில் கார் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் பயிற்சி டாக்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கோயம்புத்தூர்


கோவை மாவட்டம்,மதுக்கரை ராம்பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் ராமசிகாபதி (வயது 54), தொழிலதிபர். இவரது மகள் ராமசிவானி (22). இவர் கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ராமசிவானி இன்று வழக்கம் போல மதியம் வீட்டிற்கு வந்து விட்டு மீண்டும் கோவை அரசு மருத்துவமனைக்கு தனது காரில் சென்றுள்ளார்.

அப்போது கார் மதுக்கரை எல்.அன்.டி நெடுஞ்சாலை சந்திப்பு அருகே வந்த வந்த போது, எதிரே வந்த டேங்கர் லாரி, மீது பயங்கரமாக மோதிவிபத்துக்கு உள்ளானது.இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ராமசிவானி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மதுக்கரை போலீசார் ராமசிவானியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் லாரி டிரைவர் தில்லையரசன் (44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story