முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மாநாடு இன்று தொடக்கம்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மாநாடு இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 3 Oct 2023 2:07 AM GMT (Updated: 3 Oct 2023 5:00 AM GMT)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மாநாடு இன்று தொடங்குகிறது.

சென்னை,

சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மாநாடு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. முதல் நாள் மாநாட்டில், அமைச்சர்கள், எஸ்.பி.க்கள், , ஐ.எப்.எஸ் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில், சட்டம் - ஒழுங்கு பிரச்சினை உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

நாளை (புதன்கிழமை) கலெக்டர்கள் மாநாடு மட்டும் நடக்க உள்ளது. இதில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும், வளர்ச்சி பணிகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

முதல் நாள் மாநாட்டில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்க உரையாற்றுவதுடன், இரண்டாம் நாள் மாநாட்டில் நிறைவுரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டின்போது மாவட்டங்களுக்கும், காவல் துறைக்கும் பல முக்கிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story