எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பலி - மற்றொரு மாணவர் மின்சார ரெயில் மோதி சாவு


எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பலி - மற்றொரு மாணவர் மின்சார ரெயில் மோதி சாவு
x

எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பலியானார். மற்றொரு மாணவர், மின்சார ரெயில் மோதி உயிரிழந்தார்.

சென்னை

சென்னை பெரம்பூர் வியாசர்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் இரவு எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து வாலிபர் ஒருவர் தவறி விழுந்து இறந்து கிடப்பதாக பெ ரம்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபர் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் பலியானவர், அரக்கோணத்தை சேர்ந்த சேகர் என்பவருடை ய மகன் கார்த்திக் (வயது 19) என்பது தெரியவந்தது.

அம்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் 2-ம் ஆண்டு படித்து வந்த கார்த்திக், சென்னை சென்டிரலில் இருந்து அரக்கோணம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றபோது தவறி விழுந்து இறந்ததும் தெரிந்தது. கார்த்திக், எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது செல்போன் கொள்ளையர்கள் யாராவது, அவரை ஓடும் ரெயிலில் இருந்து அவரை கீழே தள்ளி விட்டனரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதே போல் நேற்று அதிகாலை 3 மணி அளவில் பேசின்பாலம்-வியாசர்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற போது மின்சார ரெயில் மோதி வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக கிடைத்த

தகவலின் பேரில் பெரம்பூர் ரெயில்வே போலீசார், பலியானவரின் உடலை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணை நடத்தினர். அதில் பலியானவர் வண்டலூரை சேர்ந்த ரகுபதி என்பவருடைய மகன் ஹரிஷ் பாரதி (20) என்பதும், ஓட்டேரியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது. அவர் எதற்காக அதிகாலை நேரத்தில் சென்னை வந்தார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்


Next Story