காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
கருங்கல்,
மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கருங்கலில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு வட்டார தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். பேரூராட்சி, ஊராட்சி கட்சி தலைவர்கள் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு சட்டசபை காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் விஜய்வசந்த் எம்.பி., மாநில பேச்சாளர் பால்துரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினார்கள்.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் டைட்டஸ், பொதுச்செயலாளர் ஆஸ்கார் பிரடி, தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின்சன், பாலப்பள்ளம் பேரூராட்சி தலைவர் டென்னிஸ், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.