சர்ச்சையை ஏற்படுத்திய பாமக நிறுவனர் ராமதாஸ் புகைப்படம் - காவல் ஆணையரிடம் புகார் மனு


சர்ச்சையை ஏற்படுத்திய பாமக நிறுவனர் ராமதாஸ் புகைப்படம் - காவல் ஆணையரிடம் புகார் மனு
x

பாமக நிறுவனர் ராமதாஸ் மதுபாட்டிலுடன் இருப்பதாக பொய்ச்செய்தி பரப்பியவர்களை கைது செய்யக்கோரி பாமக சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் மதுபாட்டிலுடன் இருப்பதாக பொய்ச்செய்தியை பரப்பிய விசிக மற்றும் காங்கிரஸ் பிரமுகர்களை கைது செய்யக்கோரி பாமக சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மனு அளித்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்த, வக்கீல் பாலு, 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாமக நிறுவனர் ராமதாஸ் மது ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார். இந்த செய்தியின் உண்மை தன்மை அறியாமல் காங்கிரஸ் பிரமுகர் வாழப்பாடி ராமசுகந்தன் என்பவர் வித் நோ கமெண்ட்ஸ் எனக்கூறி அந்த பதிவை மீண்டும் பகிர்ந்துள்ளார்.

சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் இந்த புகைப்படத்தில் அமைந்துள்ள பாட்டில் மதுபானம் இல்லை எனவும் CoLavita ஆலிவ் ஆயில் என்றும் அவர் கூறினார். மதுவை ஒழிப்பதற்காக போராடி வரும் ராமதாசின் நற்பெயரை கெடுக்கும் நோக்கில், உண்மைக்கு புறம்பான செய்தியை பரப்பிய விசிக பிரமுகர் கவிகண்ணா மற்றும் காங்கிரஸ் பிரமுகர் ராமசுகந்தன் ஆகியோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

1 More update

Next Story