கொரோனா விவகாரம் - தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு


கொரோனா விவகாரம் - தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு
x

கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டுமென்று ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை,

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள் தங்களிடம் சிகிச்சை பெற்று வரும் கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ள நபர்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டுமென்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தனியார் மருத்துவமனைகள் அல்லாமல் தனியார் சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களிடம் கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ள நபர்கள் சிகிச்சை பெறுவதாகவும் அதுகுறித்த தகவல்கள் மாநகராட்சியின் கவனத்திற்கு வருவது இல்லை என தெரிய வந்துள்ளது.

எனவே, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் ஆகியோர் தங்களிடம் சிகிச்சை பெற வரும் கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்கள், கொரோனா தொற்று உள்ளவர்களாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள நபர்கள் குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Next Story