கடலூர்: புற்றுநோய்க்கு மருந்து இருப்பதாகக் கூறி பெண்ணிடம் ரூ.32 லட்சம் மோசடி - நைஜீரியாவைச் சேர்ந்த 4 பேர் கைது


கடலூர்: புற்றுநோய்க்கு மருந்து இருப்பதாகக் கூறி பெண்ணிடம் ரூ.32 லட்சம் மோசடி - நைஜீரியாவைச் சேர்ந்த 4 பேர் கைது
x

மோசடியில் ஈடுபட்ட நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 4 பேரை மராட்டிய மாநிலத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

கடலூர்,

கடலூர் புதுப்பாளையத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண்ணான செல்வி என்பவர் ஆன்லைன் மூலம் வருமானம் ஈட்ட முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். அந்த சமயத்தில் அவரது மின்னஞ்சலுக்கு வந்த குறுஞ்செய்தியில் புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த மருந்தின் விலை ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் எனவும், அதை வாங்கி விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் எனவும் அந்த குறுஞ்செய்தியில் கூறப்பட்டிருந்தது. இதை நம்பிய செல்வி, அந்த நபர்களை தொடர்பு கொண்டு அவர்கள் கூறிய வங்கி கணக்குக்கு பல்வேறு தவணைகளில் 32 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார்.

ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்ட மோசடி நபர்கள் மருந்து எதுவும் அனுப்பவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்வி, இது தொடர்பாக கடலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபட்ட நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 4 பேரை மராட்டிய மாநிலத்தில் கைது செய்தனர்.



Next Story