கடலூர் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிப்பு - மீன்வளத்துறை உத்தரவு


கடலூர் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிப்பு - மீன்வளத்துறை உத்தரவு
x

வங்கக்கடலில் நிலவும் மோசமான வானிலை காரணமாக கடலூர் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடலூர்,

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் புதன்கிழமை வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. வங்கக் கடல் பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகை மீன்பிடி படகுகளும் இன்று பிற்பகல் முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.




Next Story