சிலிண்டர் விலை குறைப்பு நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிகுறி- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி


சிலிண்டர் விலை குறைப்பு நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிகுறி- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
x

சிலிண்டர் விலை குறைப்பு நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிகுறி என்றும், ‘இந்தியா' கூட்டணியில் மேலும் கட்சிகள் இணையும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது அவரிடம் நிருபர்கள் பேட்டி எடுக்க முற்பட்டனர். அந்த சமயத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களை பார்த்து, 'நீங்கள் என்ன கேட்க போகிறீர்கள் என்பதை நான் சொல்லட்டுமா? நாங்கள் மும்பைக்கு போகிறதை பற்றி கேட்க போகிறீர்கள், சரியா? என்று சிரித்தபடி கேட்டார்.

அவருடைய கணிப்பு சரியாக இருந்தது. நிருபர்கள் கேட்ட கேள்விகளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- 'இந்தியா' கூட்டணி 26 கட்சியில் இருந்து 28 கட்சியாக உயர்ந்து இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- அது இன்னும் உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

கேள்வி:- கியாஸ் விலை குறைப்பு 'இந்தியா' கூட்டணிக்கு நெருக்கடியா?

பதில்: 'இல்லை... இல்லை... இது நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதற்கான அறிகுறி.

கேள்வி:- பெட்ரோல்-டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

பதில்:- விலை குறைந்தாலும் ஆச்சரியம் இல்லை.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.


Next Story