மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

திருவள்ளூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 5 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் பஜார் வீதியில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் 5 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் எழிலரசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் திரளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு 92 தலித் குடும்பங்களுக்கு ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.


Next Story