திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு ஆர்ப்பாட்டம்


திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 July 2023 6:45 PM GMT (Updated: 4 July 2023 10:13 AM GMT)

டாக்டர், செவிலியர் பணியிடங்களை நிரப்பக்கோரி இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் உயர் சிகிச்சைக்கு தேவையான சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட உபகரணங்களை உடனே நிறுவ வேண்டும். மேலும் டாக்டர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க செயலாளர் தமிழ்ச்செல்வி ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமயந்தி, மாவட்ட கவுன்சிலர் சுஜாதா, ஒன்றிய கவுன்சிலர் இந்திரா மற்றும் நிர்வாகிகள் விஜயா, குருமணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story