ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு - தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி பாராட்டு


ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு - தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி பாராட்டு
x

முதல்-அமைச்சர் மதசார்பின்மை மீது அசைக்க முடியாது நம்பிக்கை கொண்டவர் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் அக். 2ம் தேதி நடக்க உள்ள ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்சினை காரணமாக ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க மறுத்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

"கோர்ட்டின் அனுமதி இருந்தும் கூட ஆர்.எஸ்.எஸ். பேரணியை தடை செய்திருப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பாக பாராட்டுகிறோம்.

முதல்-அமைச்சர் மதசார்பின்மை மீது அசைக்க முடியாது நம்பிக்கை கொண்டவர். எனவே அவர் எடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் சிறப்புடையது."

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.


Next Story