கணவர் வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்தியதால் மனமுடைந்தார்: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை


கணவர் வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்தியதால் மனமுடைந்தார்: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
x
திருவள்ளூர்

கணவர் வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்தியதால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் அருகே ஒண்டிக்குப்பம், வரலட்சுமி நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரசாந்த் (வயது 28). இவர் ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் உள்ள குப்புசாமி நகர், சாய்பாபா கோவில் தெருவை சேர்ந்த பவானி (24) என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ப்ரியாஸ்ரீ என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது. இந்நிலையில், பிரசாந்த்துக்கு தனது நிறுவனத்தில் பணியாற்றும் வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இதனையறிந்த பவானிக்கும் கணவர் பிரசாந்துக்கும் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சில நாட்களாக மனைவி மற்றும் குழந்தைகளை மறந்து அப்பெண்ணுடன் பிரசாந்த் குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் மணமுடைந்த பவானி நேற்று வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டார்.

இதை கண்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பவானி இறந்து விட்டதாக கூறினர்.

இது தொடர்பாக மணவாள நகர் போலீஸ் நிலையத்தில் பவானியின் தாய் உஷா புகார் அளித்தார். அதில் தனது மகளின் சாவுக்கு காரணமான பிரசாந்த் மற்றும் அவரது பெற்றோர்கள் தருமன், ரேணுகா உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மணவாள நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபப்பி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.மேலும், இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

கணவர் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தியதால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story