அக்டோபர் 9-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் - பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு


அக்டோபர் 9-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் - பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
x

திமுக பொதுக்குழு கூட்டம் வருகிற அக்டோபர் 9-ம் தேதி நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

சென்னை,

திமுக பொதுக்குழு கூட்டம் வருகிற அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்றும் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்காக பொதுக்குழு கூட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15ஆவது பொதுத்தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் 9-10-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு சென்னை, அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள "செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில்" நடைபெறும்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பொருள்: தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோர்களுக்கான தேர்தல் மற்றும் தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்" என்று கூறியுள்ளார்.


Next Story