"சமூக வலைதளங்களில் தாமாக வம்புக்கு போக வேண்டாம்" - தி.மு.க. கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வேண்டுகோள்
சமூக வலைதளங்களில் தாமாக வம்புக்கு போக வேண்டாம் என்று தி.மு.க. கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்டுக்கொண்டார்.
கரூர்,
கரூர் மாவட்டம் குளித்தலையில் தி.மு.க. இளைஞரணி சார்பில், திராவிட மாடல் பயிற்சிப் பாசறை கூட்டம் நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், குளித்தலை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்-அமைச்சர் மருதூர் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட 750 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக கூறினார்.
மேலும் நோட்டாவில் போட்டி போடுபவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் போட்டி போடுவதாக குறிப்பிட்ட அவர், சமூக வலைதளங்களில் தாமாக வம்புக்கு போக வேண்டாம் என்று அங்கிருந்த இளைஞர்களிடம் கேட்டுக்கொண்டார்.
Related Tags :
Next Story