மதுரையில் ரூ.90 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்


மதுரையில் ரூ.90 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்
x

அதிகாரிகள் சோதனை செய்த போது 10 பொட்டலங்களில் 30 கிலோ மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.

மதுரை,

சென்னையை சேர்ந்த பிரகாஷ் (42) என்பவர் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தி செல்வதாக வருவாய்பிரிவு புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைந்தது. இதையடுத்து புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேற்று இரவு அவரை பின்தொடர்ந்து சென்றனர்.

பின்னர் சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணித்த பிரகாஷ் ஏறினார். அதிகாரிகளும் ரயிலில் அவரை கண்காணித்தபடியே வந்தனர். மதுரை ரெயில் நிலையத்தில் பிரகாஷ் இறங்கியபோது, அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்தனர். இரண்டு பைகளில் சோதனை செய்ததில் 10 பொட்டலங்களில் 15 கிலோ பவுடர் மற்றும் 15 கிலோ திரவ வடிவிலான 30 கிலோ மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போதை பொருளை கைப்பற்றிய வருவாய்பிரிவு புலனாய்வுத்துறை அதிகாரிகள் பிரகாஷை பிடித்து மதுரை ரெயில்வே பாதுகாப்புப்படை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட போதைப்பொருளின் மதிப்பு சர்வதேச சந்தை மதிப்பு ரூ. 90 கோடி என கூறப்படுகிறது. பிரகாஷிடம் நடத்திய விசாரணையில் சென்னை தேனாம்பேட்டை கண்ணதாசன்நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் இவருடன் தொடர்புகொண்ட ஒரு மர்ம நபர் ஒருவர் இதனை ரெயிலில் மதுரை எடுத்துசெல்ல வேண்டும் என்றும் அப்படி எடுத்து சென்றால் பணம் தருவதாக கூறியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் பிரகாஷிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story