குடிபோதையில் தகராறு.. தாயை காப்பாற்ற தந்தையிடம் கத்திக்குத்து வாங்கிய மகள்


குடிபோதையில் தகராறு.. தாயை காப்பாற்ற தந்தையிடம் கத்திக்குத்து வாங்கிய மகள்
x
தினத்தந்தி 11 April 2024 8:27 AM IST (Updated: 11 April 2024 8:31 AM IST)
t-max-icont-min-icon

தாயை கத்தியால் குத்த துணிந்த தந்தையை கண்டு மகள் அதிர்ச்சியடைந்தாள்.

சென்னை,

சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் சேகர்ராஜ் (வயது 45). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த சேகர்ராஜ், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை குத்த முயன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது 17 வயது மகள், தாயை காப்பாற்ற குறுக்கே வந்து தந்தையை தடுக்க முயன்றார். அப்போது சிறுமியின் மார்பில் கத்திக்குத்து விழுந்தது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகர்ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story