பொதுச்செயலாளர் தேர்வு அ.தி.மு.க.வின் விதிகளுக்கு எதிரானது - ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ். தரப்பு வாதம்


பொதுச்செயலாளர் தேர்வு அ.தி.மு.க.வின் விதிகளுக்கு எதிரானது - ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ். தரப்பு வாதம்
x

அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும் என்பது அ.தி.மு.க.வின் விதி என ஓ.பி.எஸ். தரப்பு தெரிவித்துள்ளது.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் ஓபிஎஸ் அணியினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் சென்னை ஐகோர்ட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கின்றனர்.

அப்போது ஓ.பி.எஸ். தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜூலை 11 பொதுக்குழு மூலம் நடைபெற்ற பொதுச்செயலாளர் தேர்வு அ.தி.மு.க.வின் அடிப்படை விதிகளுக்கு எதிரானது என்றும், அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும் என்பது அ.தி.மு.க.வின் விதி, அதனை மாற்ற முடியாது என்றும் வாதிட்டார்.


Next Story