மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு


மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு
x

புதிதாக திறக்கப்பட்ட கடையில் மின் வேலை செய்தபோது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியானார்.

சென்னை

சென்னை அயனாவரம், மதுரை தெருவை சேர்ந்தவர் சரத்பாபு (வயது42). எலக்ட்ரீசியன். இவரது மனைவி ரீனா (38). இவர்களுக்கு பரத் (19) என்ற மகனும், சிரினா (18) என்ற மகளும் உள்ளனர்.

இவரது வீட்டு அருகே வேலு (60) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரவள்ளூர் சித்தரஞ்சன் காலனி திருவள்ளுவர் தெருவில் புதிதாக ஜெராக்ஸ் கடை ஒன்றை நேற்று திறந்தார். இவரது கடையில் சரத்பாபு எலக்ட்ரீசியன் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சரத்பாபு கீழே விழுந்தார். பின்னர் எழுந்து ஒய்வு எடுத்தபடி பேசி கொண்டிருந்த நிலையில் திடீரென மயங்கினார்.

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சரத்பாபுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பெரவள்ளுர் போலீசார் கடை உரிமையாளர் வேலு மற்றும் எலக்ட்ரிக்கல் ஒப்பந்ததாரர் பாலச்சந்தர் (47) ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைபோல சித்தாலப்பாக்கம் பகுதியில் புதியதாக குடியிருப்பு கட்டுமான பணி நடந்து வருகிறது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது ஷான்வாத் (22) கட்டுமான வேலை பார்த்து வந்தார். இவர் கட்டிடத்தில் இருந்த மின்சார சுவிட்ச்சை போட்டார். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் முகமது ஷான்வாத் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். சக தொழிலாளிகள் உடனே குரோம்படே்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஷான்வாத் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பெரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story