மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு: வனச்சரகர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் - வனத்துறை அதிரடி

மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு: வனச்சரகர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் - வனத்துறை அதிரடி
x

மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேட்டூர் வனச்சரகர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம்,

மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேட்டூர் வனச்சரகர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேட்டூர் அடுத்த குளத்தூர் அருகே உள்ள கூழ்கரடுபட்டி கிராமத்தில் காப்புக்காடை ஒட்டியுள்ள விவசாயி தோட்டத்தில் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்திருந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று யானை காப்புக்காட்டிலிருந்து உணவு தேடி வெளியே வந்த போது மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது.

இது தொடர்பாக முறையாக விசாரணை செய்யாத மேட்டூர் வனச்சரகர் அறிவழகன் உட்பட 4 பேரை சேலம் வனச்சரக பொறுப்பாளர் பெரியசாமி பணியிடை நீக்கம் செய்துள்ளார். வனச்சரகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது வனத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story