தவணைத் தொகை ரூ.650-க்காக குழந்தையை கேட்ட நிதி நிறுவன ஊழியர்கள்..!


தவணைத் தொகை ரூ.650-க்காக குழந்தையை கேட்ட நிதி நிறுவன ஊழியர்கள்..!
x

ராசிபுரத்தில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் வாங்கிய கடனின் தவணை தொகையை வசூலிக்க சென்றனர்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை போலீஸ் சரகம் வெள்ளக்கல்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பன். இவரது மகன் பாண்டித்துரை (வயது 32). இவர் ராசிபுரத்தில் பெயிண்ட் கடை வைத்துள்ளார்.

ராசிபுரத்தில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பாண்டித்துரை 40 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். அதை வாரம் ரூ.650 வீதம் 70 வாரம் செலுத்த வேண்டும். இதுவரை அவர் 40 தவணை செலுத்தி உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் பாண்டித்துரை 41-வது தவணை தொகை ரூ.650-ஐ ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். இதை கவனிக்காத நிதி நிறுவன ஊழியர்கள் அவரது மாமனார் வீட்டிற்குச் சென்று கடன் தவணைத் தொகையை கேட்டுள்ளனர். அங்கு பாண்டிதுரையின் மனைவி சோனியா (26) மற்றும் ஒரு வயது குழந்தை மட்டும் இருந்துள்ளனர்.

இவர்களிடம் நிதி நிறுவன ஊழியர்கள் தவணைத் தொகை கேட்டு மிரட்டியதுடன் குழந்தையை கொடுங்கள் கடன் தொகையை கட்டி விட்டு குழந்தையை தூக்கி செல்லுங்கள் என கூறியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அந்தப் பகுதியில் பொதுமக்கள் கூடவே நிதி நிறுவன ஊழியர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த சம்பவம் நாமகிரிப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story