தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்


தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
x

டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க பா.ம.க. தான் வலியுறுத்தியது என அன்புமணி ராமதாஸ் பேசினார்.

மயிலாடுதுறை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மயிலாடுதுறையில் பிரசாரம் மேற்கொண்டார். மயிலாடுதுறை பா.ம.க. வேட்பாளர் ஸ்டாலினை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

பா.ம.க. இல்லாவிட்டால், டெல்டாவே அழிந்து போயிருக்கும். தேர்தலுக்காகவோ, ஓட்டுக்காகவோ நான் பேசவில்லை. டெல்டாவை தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் அழிக்க பார்த்தது. 57 ஆண்டு காலம் ஆட்சி செய்யும் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க பா.ம.க.தான் வலியுறுத்தியது. மேகதாது அணை கட்டப்பட்டால், நமக்கு ஒரு சொட்டு தண்ணீர் வராது.எதற்கு இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம் என அதிமுகவுக்கே தெரியவில்லை. பா.ம.க. வேட்பாளர் வெற்றி பெற்றால், பிரதமரை நேரடியாக சந்தித்து பேச முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story