ஆட்டோவில் பயணம் செய்த பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் - அதிர்ச்சியில் குதித்த மாணவி..!


ஆட்டோவில் பயணம் செய்த பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் - அதிர்ச்சியில் குதித்த மாணவி..!
x

புதுவண்ணாரப்பேட்டையில் ஆட்டோவில் பயணம் செய்த மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை

சென்னை:

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 14 வ யது மாணவி தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி வழக்கம்போல் இன்று பள்ளி செல்ல ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளார்.

அந்த ஆட்டோவில் ஏற்கனவே 25 வயது மதிக்கதக்க இரண்டு வாலிபர்கள் டோல்கேட்டில் இருந்து தங்கசாலை செல்வதற்காக பயணித்து வந்தனர்.

புதுவண்ணாரப்பேட்டையை ஆட்டோ நெருங்கியபோது மாணவியிடம் மர்ம நபர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனால் மாணவியின் மூக்கு, தாடை, இரண்டு கைகளிலும் காயங்கள் ஏற்பட்டது.

இதையடுத்து ஆட்டோவில் இருந்த மர்ம நபர்கள் தப்பி ஓடினர். உடனடியாக ஆட்டோ டிரைவர் மாணவியை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரித்தனர். மேலும் எண்ணூர் நேதாஜி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சார்லஸ் (வயது 49) என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

மேலும் மர்ம நபர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் மாணவிக்கு ஆட்டோவில் இருந்து குதித்தாரா அல்லது மாணவியை கடத்தல் முயற்சி நடந்ததா என்ற கோணத்திலும் விசாரிக்கின்றனர். ஓடும் ஆட்டோவில் இருந்து மாணவி குதித்த இச்சம்பவம் புதுவண்ணாரப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story