ஆயுதங்கள், போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கைது - என்.ஐ.ஏ. அதிரடி நடவடிக்கை


ஆயுதங்கள், போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கைது - என்.ஐ.ஏ. அதிரடி நடவடிக்கை
x
சென்னை

சென்னை,

இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக என்.ஐ.ஏ. போலீசார், 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். அந்த வழக்கு தொடர்பாக, திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் சோதனை நடத்தினார்கள். இந்த வழக்கு தொடர்பாக 14 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். அதில் குணசேகரன் என்ற முக்கிய குற்றவாளியும் ஒருவர்.

அவருடன் இணைந்து ஆயுதக்கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு உதவி செய்ததாக, சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரைச் சேர்ந்த லிங்கம் என்ற ஆதிலிங்கம் (வயது 43) என்பவரை, என்.ஐ.ஏ. போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். அவர் சில முக்கிய நடிகர்களின் படத்துக்கு தயாரிப்பு மேலாளராகவும் பணியாற்றி உள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் இருப்பதாக என்.ஐ.ஏ.போலீசார் சந்தேகப்பட்டு அவரை தேடும் முயற்சியில் இறங்கி உள்ளதாக தெரியவந்துள்ளது.


Next Story