திருப்பூர் மாவட்டத்திற்கு பிப். 2-ந் தேதி உள்ளூர் விடுமுறை


திருப்பூர் மாவட்டத்திற்கு பிப். 2-ந் தேதி உள்ளூர் விடுமுறை
x

கோப்புப்படம்

உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 3-ந் தேதி பணிநாளாக செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வருகிற பிப். 2-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற பிப். 2-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக பிப். 3-ந் தேதி பணிநாளாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 2-ந் தேதியன்று அரசு அவசர அலுவல்களை கண்காணிக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்றும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story