சென்னையில் விமான சேவை தாமதம் - பயணிகள் தவிப்பு


சென்னையில் விமான சேவை தாமதம் - பயணிகள் தவிப்பு
x

டெல்லியில் இருந்து சென்னைக்கு தாமதமாக வந்த விமானத்தால், இலங்கை, அந்தமான் விமான சேவை பாதிக்கப்பட்டது.

சென்னை,

டெல்லியில் இருந்து சென்னைக்கு தாமதமாக வந்த விமானத்தால், இலங்கை, அந்தமான் விமான சேவை பாதிக்கப்பட்டது. பொதுவாக டெல்லியில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா விமானம், பன்னாட்டு விமானமாக கொழும்பு சென்று, பிறகு சென்னை திரும்பி மீண்டும் உள்நாட்டு விமானமாக அந்தமான் சென்றடையும்.

இந்நிலையில், டெல்லியில் இருந்து வந்த விமானம் 3 மணி நேரம் தாமதமாக அதிகாலை 2.30 மணியளவில் வந்தடைந்தது. இதனையடுத்து இலங்கைக்கு 4 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. தொடர் சங்கிலியாக இந்த விமானத்தின் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.


Next Story