வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி


வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி
x

இது தொடர்பாக சென்னை, மாம்பலம் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி சாப்ட்வேர் கம்பெனி உரிமையாளரிடம் 16 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. சென்னை தரமணியில் சாப்ட்வேர் கம்பெனி நடத்தி வரும் வினோத் தம்பிரான் என்பவரிடம், தனக்கு வங்கியில் நல்ல செல்வாக்கு இருப்பதாக கூறி சண்முகநாதன் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார்.

தன் செல்வாக்கை பயன்படுத்தி கடன் பெற்றுத் தருவதாக கூறிய சண்முகநாதனிடம், 2 கோடி ரூபாய் கடன் கேட்ட வினோத், அதற்கு முன்பணமாக 16 லட்ச ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. பணத்தை பெற்றபின் சண்முகநாதனை தொடர்பு கொள்ள முடியாததால் அதிர்ச்சியடைந்த வினோத் தம்பிரான், சென்னை, மாம்பலம் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story