அடகு நகையை மீட்பதாக கூறி ரூ.6 லட்சம் மோசடி


அடகு நகையை மீட்பதாக கூறி ரூ.6 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 18 Oct 2023 8:45 PM GMT (Updated: 18 Oct 2023 8:45 PM GMT)

அடகு நகையை மீட்டுதருவதாக கூறி ரூ.6 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்
அடகு நகையை மீட்டுதருவதாக கூறி ரூ.6 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


இது குறித்து போலீசார் கூறியதாவது:-


ரூ.5.95 லட்சம் மோசடி


கோவை போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் துணை மண்டல மேலாளராக பணியாற்றி வருபவர் ஜெகன் (வயது 35). இவர் போத்தனூர் போலீசில் அளித்துள்ள புகாரில் "எங்களது நிதி நிறுவனத்திற்கு கோவை வெள்ளலூர் மகாகணபதி நகர் பகுதியை சேர்ந்த தர்ஷனா (வயது28) என்பவர் வந்தார். அவர் தன்னிடம் 22 பவுன் தங்க நகை இருப்பதாகவும், அந்த தங்க நகைகளை வங்கியில் அடமானம் வைத்திருப்பதாகவும் கூறினார்.


மேலும் அவர், அந்த நகையை மீட்க 5 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் தேவை" என கூறினார். அவருக்கு தங்க நகையை மீட்டுத் தர பணம் தருவதற்கு எங்களது நிதி நிறுவன நிர்வாகிகள் ஒப்புக்கொண்டு பணம் கொடுத்தனர்.


2 பேர் கைது


இந்த நிலையில் தர்ஷனா, நிதி நிறுவனத்தில் இருந்து உரிய பணத்தை வாங்கிக் கொண்டு சென்றார். ஆனால் நகையை மீட்டு எங்களிடம் ஒப்படைக்கவில்லை. இதற்கு மற்றொரு நிதி நிறுவனத்தில் பணியாற்றும் மேலாளர் சுரேஷ் உடந்தையாக இருந்துள்ளார். இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த புகாரில் தெரிவித்து இருந்தார்.


இதன் அடிப்படையில் போலீசார் தர்ஷனா, சுரேஷ் ஆகிய இருவர் மீதும் மோசடி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.



Next Story