விளம்பர நிறுவனம் தொடங்கவைத்து மோசடி: சென்னை பட்டாசு வியாபாரியிடம் ரூ.1.88 கோடி சுருட்டிய ஆசாமி


விளம்பர நிறுவனம் தொடங்கவைத்து மோசடி: சென்னை பட்டாசு வியாபாரியிடம் ரூ.1.88 கோடி சுருட்டிய ஆசாமி
x

சென்னை பட்டாசு வியாபாரியை விளம்பர நிறுவனம் தொடங்க வைத்து ரூ.1.88 கோடி சுருட்டிய நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை

சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர் பீர் அனீஸ் ராஜா (வயது 47). பட்டாசு வியாபாரி. இவரிடம் தனியார் 'ரேடியோ' எப் எம்.ல் விளம்பர பிரிவில் ஊழியராக பணியாற்றிய விஜயராகவன் என்பவர், விளம்பர நிறுவனம் தொடங்க வைத்து ரூ.1.88 கோடி மோசடி செய்துள்ளார்.

இந்த பணத்தை பீர் அனீஸ் ராஜா கேட்ட போது, பிரபல நகை கடையின் பெயரில் போலி வவுச்சர் தயார் செய்து, நகைகள் வாங்கி கொள்ளலாம் என்றும் ஏமாற்றி உள்ளார்.

இந்த மோசடி குறித்து பீர் அனீஸ் ராஜா மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி தடுப்பு பிரிவில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பம்மல் வ.உ.சி. நகர் சூரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விஜயராகவனை (39) பல்லாவரத்தில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story