பூந்தமல்லி நீதிமன்ற கழிவறையில் கிடந்த கஞ்சா - கைதிகளுக்கு ரகசியமாக கொடுக்க வைக்கப்பட்டதா?


பூந்தமல்லி நீதிமன்ற கழிவறையில் கிடந்த கஞ்சா - கைதிகளுக்கு ரகசியமாக கொடுக்க வைக்கப்பட்டதா?
x

கோப்புப்படம்

பூந்தமல்லி நீதிமன்ற கழிவறையில் 50 கிராம் கஞ்சாவை கண்டெடுத்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை

பூந்தமல்லி:

மவுண்ட் ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிந்து வருபவர் ராமமூர்த்தி. இவர் இன்று பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கைதிகளை ஆஜர்ப்படுத்த புழல் சிறையில் இருந்து கைதிகள் சிலரை அழைத்து வந்தவர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நிறுத்தி வைத்து விட்டு நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்றபோது அங்கிருந்த ஜன்னல் மேல் கருப்பு நிற டேப் அடிக்கப்பட்ட கவர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதை எடுத்து பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இது குறித்து பூந்தமல்லி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

போலீசார் விசாரணையில் கழிவறையில் கிடைத்த கஞ்சா சுமார் 50 கிராம் இருக்கும் எனவும் சிறையில் இருந்து வாரண்டுக்கு நீதிமன்றத்திற்கு வரும் கைதிகளுக்கு ரகசியமாக கஞ்சா கொடுக்க வைக்கப்பட்டதா? என்ற கோணத்தில் கஞ்சாவை வைத்த நபர்கள் யார்? என்பது குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கில் ஆஜராக வந்த கைதிக்கு கஞ்சா கொடுத்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.


Next Story