அரசு பஸ்களை இயக்க தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு அரசு அழைப்பு


அரசு பஸ்களை இயக்க தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு அரசு அழைப்பு
x

சென்னையில் மாநகர பஸ்கள் 97.68 சதவீதம் இயக்கப்படுகின்றன.

சென்னை,

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்த நிலையிலும், தமிழ்நாடு முழுவதும் பஸ்கள் ஓடின. இன்றும் பஸ்கள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.

தமிழகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 97.7 சதவீத பஸ்கள் இயக்கப்படுகின்றன. மொத்தம் இயக்கப்பட வேண்டிய 15 ஆயிரத்து 226 பஸ்களில் 14 ஆயிரத்து 888 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் மாநகர பஸ்கள் 97.68 சதவீதம் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், அரசு பஸ்களை இயக்க தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அசல் உரிமம், ஆதார் அட்டையுடன் மாவட்ட போக்குவரத்து கழக அதிகாரிகளை அணுக அரசு அறிவுறுத்தி உள்ளது.


Next Story