13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்


13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
x

சென்னை அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முன்பு 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சென்னை

சென்னை அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முன்பு 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அரசு டாக்டர்களுக்கான சட்டப்போராட்டக்குழு சார்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு குழுவின் தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை தலைமை தாங்கினார். பின்னர் நிருபர்களிடம் டாக்டர் பெருமாள் பிள்ளை கூறியதாவது:-

அரசாணை 354-ன் படி 12 ஆண்டுகளின் ஊதியப்பட்டை 4 தரப்பட வேண்டும். கொரோனாவால் உயிரிழந்த அரசு டாக்டர் விவேகானந்தனின் மனைவிக்கு தகுதிக்கேற்ற வேலை வழங்க வேண்டும். பல் டாக்டர்களுக்கு 7 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த பதவி உயர்வை அளிக்க வேண்டும். அரசு பணி நியமணம் தரப்படாத பல் டாக்டர்களுக்கு பணி நியமனம் செய்ய வேண்டும். மருத்துவர்களின் கோரிக்கைகாக உயிரிழந்த டாக்டர் லட்சுமி நரசிம்மனின் நினைவு இடம் வழியாக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ள சரபங்கா குடிநீர் திட்டத்தை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story