தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு
தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் உத்தரவின்படி, சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை செயலாளராக அர்ச்சனா பட்னாய்க் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்துறை ஆணையர் மற்றும் இயக்குநராக நிர்மல்ராஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையராக பூஜா குல்கர்னி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். குடிமைப்பொருள் வழங்கல் துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையராக ஹர்ஷகே மீனா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story